நாடாளுமன்றம் நோக்கி சென்ற எதிர்கட்சி எம்.பி.களை FRU உறுப்பினர்கள் தடுத்தனர்; வழியின்றி கலைந்து சென்றது எதிர்கட்சி எம்.பி.க்கள் கூட்டம்

கோலாலம்பூர்,ஆகஸ்டு 2:

டத்தரான் மெர்டேக்காவிலிருந்து நாடாளுமன்றத்திற்கு பேரணியாக செல்ல எதிர்க்கட்சி எம்.பி.க்களின் முயற்சி செய்த வேளையில், கலவர கேடயங்களுடன் ஆயுதம் ஏந்திய மத்திய ரிசர்வ் பிரிவு (Federal Reserve Unit) அவர்களை மேலும் செல்ல விடாமல் தடுத்தனர்.

பிரதமர் முஹிடின் யாசின் மற்றும் அவரது அமைச்சரவைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதற்காக இன்று கூடிய எதிர்கட்சி எம்.பி.க்கள் காலை 10.20 மணியளவில் நாடாளுமன்றத்தை நோக்கி நடைபயணத்தை தொடங்கினர்.

“ஹிடுப் ராக்யாட் (Hidup Rakyat) “மற்றும் “டவுலட் துவாங்கு (Daulat Tuanku)” என்ற முழக்கங்கள் எம்.பி.க்கள் குழுவிலிருந்து ஒலித்தன. அவர்கள் தங்கள் அணிவகுப்பைத் தொடர அனுமதிக்குமாறு போலீசாரிடம் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் டத்தரான் மெர்டேகாவிலிருந்து ஜாலான் பார்லிமென் (Jalan Parlimen) நுழைவாயிலை FRU பணியாளர்கள் தடுத்ததால் அவர்கள் நாடாளுமன்ற மைதானத்திற்குள் நுழைய முடியவில்லை.

FRU அதிகாரிகள் கூடியிருந்த அனைவரையும் வெளியேறுமாறு வற்புறுத்தியதால், அவர்கள் காலை 10.40 மணியளவில் கலைந்து சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here