அரசு மருத்துவமனையில் தொடக்கம் !
திருப்பூர்:
அவிநாசி கிழக்கு ரோட்டரி சார்பில், திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், தாய்ப்பால் வங்கி துவக்கப்பட்டது.மருத்துவ கல்லுாரி ‘டீன்’ முருகேசன் தலைமை வகித்தார்.
மருத்துவமனை கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். குழந்தை நல சிறப்பு டாக்டர் பிரியா, குழந்தை பிறந்தவுடன், தொடர்ந்த ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுப்பது, குறித்து அறிவுரை வழங்கினார்.
அவிநாசி கிழக்கு ரோட்டரி தலைவர் விசித்ரா, செயலாளர் செல்வராணி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், ‘அச்சிந்தியா’ தாய்ப்பால் தான நிர்வாகி ராஜேஸ்வரி பங்கேற்றனர்.
தாய்ப்பாலுக்கு மிஞ்சிய உணவில்லை’தாய்க்கு மிஞ்சிய தெய்வமில்லை; தாய் பாலுக்கு மிஞ்சிய உணவில்லை’. பிறந்த குழந்தைக்கான மிகச்சிறந்த உணவு தாய்ப்பால். தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு சீரான ஊட்டச்சத்து கிடைக்கும்; செரிமானம் சீராகும்.
மூளை வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்திஅதிகரிக்கும். தானம் செய்யப்பட்ட தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஆசீர்வாதமாக அமைகிறது. ஆரோக்கியமான பாலுாட்டும் தாய்மார், அதிகப்படியான பால் சுரக்கும் தாய்மார் தாராளமாக தாய்ப்பால் தானம் செய்யலாம் என,’ தாய்மார்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.