புதிதாக பிறந்த ஆண் குழந்தை பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுப்பு

கோத்த கினபாலு: புன்டுசானில் உள்ள ஒரு வணிகக் கடையின் படிக்கட்டில், புதிதாகப் பிறந்த ஆண் குழந்தை பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட நிலையில் இறந்து  கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

புதன்கிழமை (ஆகஸ்ட் 4) பிற்பகல் 1.10 மணியளவில் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டபோது குழந்தை சுமார் ஆறு மணி நேரம் முன்பு  இறந்துவிட்டதை மருத்துவக் குழு உறுதிசெய்ததாக பெனாம்பாங் மாவட்ட போலீஸ் தலைமை துணைத் தலைவர் முகமது ஹாரிஸ் இப்ராகிம் கூறினார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக குயின் எலிசபெத் மருத்துவமனை, கோத்த கினபாலுவுக்கு கொண்டு செல்லப்பட்டது. குற்றவியல் சட்டம் பிரிவு 318 இன் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் காவல்துறையினர் தங்கள் விசாரணையில் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர் என்றும் அவர் கூறினார்.

தகவல் தெரிந்தவர்கள் பெனாம்பாங் மாவட்ட காவல் செயல்பாட்டு அறை எண் 088-723 961 அல்லது விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் அஸெரினா அலி ஓமாரை 014-653 5238 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here