அம்னோ உச்ச மன்ற கவுன்சில் உறுப்பினர் ரஸ்லான் ரஃபி (LTAT) வாரியத்திலிருந்து விலகினார்.

பெட்டாலிங் ஜெயா: அம்னோ உச்ச மன்ற கவுன்சில் உறுப்பினர் ரஸ்லான் ரஃபி Lembaga Tabung Angkatan Tentera (LTAT) வாரியத்திலிருந்து விலகினார்.

நாட்டின் நடப்பு பிரதமர் முஹிடின் யாசினின் நிர்வாகத்தின் ஆதரவை திரும்பப் பெறுவதற்கான தமது கட்சியின் முடிவுக்கு இணங்குவதாகவும், அதன் காரணமாகவே தான் இந்த வாரியத்திலிருந்து விலகியதாகவும் அவர் கூறினார்.

“நான் LTAT வாரியத்திலிருந்து விலகிவிட்டேன்,” என்று அவர் நேற்று (ஆகஸ்டு 4) தேதியிட்ட கடிதத்தில் தெரிவித்தார்.

இந்த LTAT வாரியத்தின் உறுப்பினராக தன்னை நியமித்ததற்கு துணை பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

“என் பதவிக் காலத்தில் LTAT -யில் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here