WHO அங்கிகரித்திருக்கும் மற்றும் அவசர கால பயன்பாட்டின் கீழ் பட்டியலிடப்பட்ட தடுப்பூசிகள் செலுத்தியவர்களை சிங்கப்பூர் ஏற்றுக்கொள்ளும்

உலக நாடுகள் மிக வேகமாக கோவிட்-19 க்கு எதிரான தடுப்பூசிகள் செலுத்துவதில் மிக தீவிர கவனம் செலுத்தி வருவதோடு, தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களை ஊக்கிவிக்கும் முகமாக பல சலுகைகளையும் அறிவித்து வருகின்றது.

சிங்­கப்­பூ­ரின் தேசிய தடுப்­பூ­சித் திட்டத்­தில் பயன்­ப­டுத்­தப்­படும் ஃபைசர்-பயோ­என்­டெக்/கமிர்­னட்டி, மொடர்னா ஆகிய தடுப்­பூ­சிக­ளு­டன் சினோவேக், சினோ­ஃபார்ம், ஆஸ்ட்ரா­செ­னக்கா, ஜான்­சன் அண்ட் ஜான்­சன், கொவி­ஷீல்டு ஆகிய தடுப்பூ­சி­களும் உலக சுகா­தார நிறுவ­னத்­தின் அவசரகா­லப் பயன்பாட்­டுப் பட்­டி­ய­லின் ­கீழ் இடம் பெ­று­கின்­றன.

சினோ­வேக், சினோ­ஃபார்ம், ஆஸ்ட்ராசெ­னக்கா, ஜான்­சன் அண்ட் ஜான்­சன், கொவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வோரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டிருப்பவர்கள் என்று எடுத்துக்கொள்ளப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட தடுப்­பூசி மருந்தின் இரண்­டா­வது தடுப்பூசியைப் போட்டு இரண்டு வாரங்­க­ள் கழித்து, ஒரு­வர் முழுமையாகத் தடுப்­பூசி போட்டுக்கொண்­ட­வர் என்று ஏற்றுக்கொள்­ளப்­படும் என சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று தெரிவித்தார்.

“நமது தேசிய தடுப்பூசித் திட்டத்தின்கீழ் சிங்கப்பூரில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் விகிதம் அதிகமாக உள்ளது. இதனால் ஃபைசர்-பயோஎன்டெக்/கமிர்னட்டி, மொடர்னா ஆகிய தடுப்பூசிகளைத் தவிர்த்து உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகாலப் பட்டியலில் இடம்பெறும் தடுப்பூசிகளையும் சிங்கப்பூர் ஏற்றுக்கொள்கிறது,” என்றார் அமைச்சர் ஓங்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here