மூன்று வாரங்களுக்கு முன் எரிவாயு கசிந்து தீக்காயங்களுக்கு உள்ளான மருத்துவ நிபுணர் உயிரிழந்தார்

ஜார்ஜ் டவுன்: சுமார் மூன்று வாரங்களுக்கு முன்பு  வீட்டில் எரிவாயு கசிவால் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து மிகுந்த  தீக்காயங்களுக்கு உள்ளான ஒரு மருத்துவ  சிகிச்சை நிபுணர் பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனையின் ஆலோசகர் காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் மற்றும் ஹெபடாலஜிஸ்ட் டாக்டர் சியோ எங் லோக் காலமானார் என்று மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அவருக்கு வயது 53.

ஜூலை 20 சம்பவத்தில், சோலோக் ஜெஸ்ஸல்டனில் உள்ள அவரது வீட்டில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீவிபத்தை தொடர்ந்து அவர் உடல் முழுவதும் 95% தீக்காயங்கள் ஏற்பட்டது. சியோவின் மனைவி போலீசாரிடம் அவர் அதிகாலை 5.30 மணியளவில் எரிவாயு கசிவு ஏற்பட்டதாக சந்தேகித்தபோது கீழே சென்றார்.

வீட்டுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த எல்பிஜி சிலிண்டர்களுடன் இணைக்கப்பட்ட குழாயில் கசிவு ஏற்பட்டதை புலனாய்வாளர்கள் கண்டறிந்தனர், அதுவும் மோசமாக சேதமடைந்தது. இதில் தவறான செயலாக இருக்கும் என்பதை  காவல்துறை நிராகரித்துள்ளது.

சியோ பினாங்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஐசியுவில் வைக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் 16 ஆண்டுகள் பணியாற்றினார் மற்றும் 80,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு அவர் சிகிச்சை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here