சாலை தடுப்பு வேலியில் (Divider) கார் மோதி தாய் பலி; குழந்தை காயத்துடன் மீட்பு

பெட்டாலிங் ஜெயா: செவ்வாய்க்கிழமை (ஆகஸ்டு 17) ஜோகூர் பாரு சேனாய் டேசாரு நெடுஞ்சாலையின் 19.2 கிலோமீட்டர் இல் நடந்த விபத்தில் ஒரு வெளிநாட்டு பெண் இறந்தார், அவரது மூன்று மாத குழந்தை காயத்துடன் மீட்கப்பட்டது.

பிற்பகல் 2 மணியளவில் நடந்த சம்பவத்தில், கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை டிவைடரில் மோதியதில் பாதிக்கப்பட்ட குழந்தை வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டதாக கூறப்படுகிறது.

ஜோகூர் ஜெயா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் (BBP) செயல்பாட்டுத் தலைமை தீயணைப்பு அதிகாரி II M ஹரிதாஸ் கூறுகையில், மதியம் 2.25 மணிக்கு இந்த சம்பவம் குறித்த தகவல் தங்களுக்கு கிடைத்தது என்றார்.

58 வயதான உள்ளூர் மனிதர் ஓட்டிய கார், ஜோகூர் பாருவில் இருந்து பண்டார் பெனாவார், கோத்தா திங்கி நோக்கி சென்று கொண்டிருந்தது.

“காரை ஓட்டிய ஓட்டுநரின் தலை மற்றும் கைகளில் லேசான காயம் ஏற்பட்டது, அதே நேரத்தில் குழந்தையின் தலையிலும் காயம் ஏற்பட்டது என்று தெரிவித்தார்..

“41 வயதான இந்தோனேசியரான அவரது தாயார் சம்பவ இடத்திலேயே இறந்தார், மேலும் அவரது குழந்தை மேலதிக சிகிச்சைக்காக சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது,” என்றும் அவர் கூறினார்.

தீயணைப்பு மீட்பு டெண்டர் (FRT) இயந்திரம் மற்றும் அவசர சேவைகள் உதவி பிரிவு (EMRS) உடன் ஒன்பது உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதாகவும் சுமார் 2.33 மணியளவில் மீட்பு நடவடிக்கை முடிந்தது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here