“சுடோக்கு “ விளையாட்டின் தந்தை மகி காஜி மரணம்

டோக்கியோ: எண்களைக் கொண்டு புதிர்களை அமைக்கும் கணித விளையாட்டுகளை சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த யூலர் 18-ம் நூற்றாண்டில் கண்டுபிடித்தார். அதில் இருந்து பல விதமான எண்கள் விளையாட்டுகளை பலரும் உருவாக்கினார்கள்.

இந்தநிலையில் ஜப்பான் நாட்டை சேர்ந்த மகி காஜி என்பவர் ‘சுடோக்கு’ என்ற புதிய விளையாட்டை கண்டுபிடித்தார். அவர் கண்டுபிடித்த சுடோக்கு 1986-ம் ஆண்டு பத்திரிகைகளில் வெளிவந்தது.

அது பின்னர் உலகம் முழுவதும் பிரபலமாக மாறியது. சுடோக்கு விளையாட்டை இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் விளையாடி வருகிறார்கள். இதை கண்டுபிடித்த மகி காஜி மரணம் அடைந்துள்ளார்.

அவருக்கு 69 வயது. கடந்த 10 ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here