நெகிரியின் 5 மாவட்டங்களில் ஆகஸ்ட் 24 ஆம் தேதி நீர் விநியோகத் தடை ஏற்படும்

சிரம்பான்: நெகிரி செம்பிலானில் உள்ள ஐந்து மாவட்டங்களில் பல பகுதிகளில் நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் குழாய் மாற்றுதல் மற்றும் பராமரிப்பு பணிகளை Syarikat Air Negri Sembilan (Sains) மேற்கொள்ள இருப்பதால் ஆகஸ்ட் 24ஆம் தேதி  தற்காலிகமாக நீர் விநியோகத் தடை ஏற்படும். அவை கோலபிலா, ஜெம்போல், தம்பின், ரெம்பாவ் மற்றும் போர்ட்டிக்சன் ஆகிய மாவட்டங்களாகும்.

Sains பொது விவகாரங்கள் துறைத் தலைவர் நோர்சிதா இஸ்மாயில் கூறுகையில், நுகர்வோர்கள் அன்று காலை 8 மணி முதல் 24 மணி நேர தடையை எதிர்கொள்ள கூடும்.

கோல பிலாவில் டாங்கி, ஜோஹோல், உலு யூ, ஏர் மாவாங், கெப்பிஸ் பாரு, செனாலிங், சுங்கை துவா பெசார், ஸ்ரீ பிலா, ஶ்ரீ மெனந்தி, மெலாங், தஞ்சோங் ஈப்போ, பெலாங்காய், பீடிங், பாரிட் திங்கி, ஸ்ரீ ஜெமாபோ, பாடாங் லெபார் மற்றும் ஜுவாஸ் ஆகியவை பாதிக்கப்பட்ட பகுதிகளாகும்.

ஜெம்போலில் தாமான் சொர்ணம், தாமான் சேட்லைட், கம்போங் கோலா ஜெம்போல், கம்போங் பாடாங் லாலாங், பாடாங் லடாங் கிடிஸ், டேசா புத்ரா, காசி புத்ரா, தாமான் பகாவ்,  IOI மஹ்ஸான், கம்போங் பஞ்சர், தாமான் ஸ்ரீ ரொம்பின் மற்றும் கியாரா தொழில்துறை பகுதி.

தம்பினில் தாமான் இண்டா, தாமான் க்ளோன்லி, தாமான் தெங்கு பெசார், தம்பின் டவுன், ஜெமென்ஷே பாரு, தாமான் டத்தோ தாஹா, தமன் அசஹான் இண்டா, தாமான் ஸ்ரீ அசஹான், கம்போங் ஸ்ரீ ஹசான், ரூமா ரக்யாட் கெமெஞ்சே 2, கம்போங் பாரு கெடோக், பெல்டா புக்கிட் ரோக்கன் மற்றும் ரூமா ராக்யாட் பாதாங் ரோக்கன் ஆகிய பகுதிகளாகும்.

ரெம்பாவில் கம்போங் குன்டூர் ஹீலிர், டேசா பெர்மாய் குன்டூர், கம்போங் பீலின், யுஐடிஎம், லாடாங் சுங்கை பாரு, லாடாங் புக்கிட் பெர்த்தாம், கம்போங் சுங்கை தீமுன் டாலாம், கம்போங் சுங்கை தீமுன் லுவார், ரூமா ராக்யாட் லுபுக் சீனா ஃபாஸா 1&2  மற்றும் ரூமா ராக்யாட் லுபுக் சீனா ஃபாஸா 2.

போர்ட்டிக்சனில், இந்த இடையூறு லிங்கி, பெங்கலன் கெம்பாஸ், செங்காங் (பிடி .18, 19, 20, 21, 22),  கம்போங் தஞ்சோங் ஆகாஸ், பாசிர் பஞ்சாங், கம்போங் ஓராங் அஸ்லி புக்கிட் கெபாங், ஜாலான் பந்தாய், ரூமா ரக்யாட் கம்போங் டெலோக் பெலண்டோக் மற்றும் டெலோக் கெமாங் ஆகியவை பகுதிகளாகும்.

24 மணி நேரத்திற்குள் விநியோகத்தை மீட்டெடுக்காவிட்டால், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செயின்ஸ் தண்ணீர் டேங்கர்களை அனுப்பும் என்று நோர்சிடா கூறினார். மேலும் தகவலுக்கு பொதுமக்கள் 1-800-88-6982 கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here