இலங்கையில் தீவிரமடைந்து வரும் டெல்தா வைரஸ் திரிபின் தாக்கம்; நேற்றைய மரண எண்ணிக்கை 198 ஆக பதிவு.

இலங்கையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 198 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக இலங்கை அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,183 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 117 ஆண்களும் 81 பெண்களும் உள்ளடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 385,696 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 323,390 ஆக அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here