மற்றொருவரின் மைசெஜெத்ரா கணக்கை பயன்படுத்தி தடுப்பூசி போட்டு கொள்ள முயன்ற பெண் கைது

மலாக்காவில் ஒரு தனியார் கிளினிக்கில் தடுப்பூசி போட மற்றொரு நபரின் மைசெஜத்ரா கணக்கை பயன்படுத்தியதாக கூறப்படும் ஒரு பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

மலாக்கா வணிக குற்றவியல் தலைவர் சுந்தரராஜன் கூறுகையில், சந்தேகநபர் ஒரு வெளிநாட்டு தொழிலாளி என்றும், இந்த வழக்கில் புலனாய்வாளர்கள் உஷார் படுத்தப்பட்டதை அடுத்து, அவருடன் அவரின் மூன்று நாட்டவர்கள் மற்றும் ஒரு உள்ளூர்வாசி கைது செய்யப்பட்டதாகவும் கூறினார்.

சந்தேகநபர் ஆகஸ்ட் 18 அன்று மற்றொரு வெளிநாட்டவரின் விவரங்களை ஸ்கேன் செய்து தனியார் கிளினிக்கில் தடுப்பூசிக்கு பதிவு செய்தார். அதே நாளில் அவரது முதலாளியால் போலீஸ் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது என்று அவர் திங்களன்று (ஆகஸ்ட் 23) கூறினார்.

மைசெஜ்தெரா தவறாகப் பயன்படுத்துவதில்  கும்பலின் ஈடுபாட்டைத் தேடுவதால் காவல்துறையினர் இந்த வழக்கை தீவிரமாக எடுத்துக் கொண்டனர்.

எவ்வாறாயினும், ஆரம்பகட்ட விசாரணைகள் இந்த வழக்கு தனிமைப்படுத்தப்பட்ட வழக்கு மற்றும் விசாரணை நடந்து கொண்டிருப்பதை காட்டுகிறது என்று அவர் கூறினார்.

நான்கு சந்தேக நபர்களும் 35 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் மோசடி செய்த குற்றவியல் சட்டம் பிரிவு 420 மற்றும் குடிவரவு சட்டம் 1959/1963 ஆகியவற்றின் கீழ் விசாரணைக்கு உதவ தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சுந்தர ராஜனின் கூற்றுப்படி, சந்தேகநபர் தொழிற்சாலை ஊழியர் ஆவார். அவர் தடுப்பூசி பெறுவதற்காக தனது சக ஊழியரின் கணக்கை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

தடுப்பூசிக்கு தனது தொழிலாளி ஒருவரை பதிவு செய்ய முடியாமல் போனதும், முறைகேடாக இருப்பதைக் கண்டறிந்ததும் அவர்களின் முதலாளி ஏதோ தவறு செய்ததாக சந்தேகித்ததாக அவர் கூறினார்.

சந்தேகநபரிடமிருந்து தடுப்பூசி அட்டை, போலி குடிவரவு அடையாள அட்டை மற்றும் காலாவதியான கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here