உடற்பயிற்சிக்காக வீட்டை சுற்றி சைக்கிள் ஓட்டிய ஆடவர்; வீட்டின் முன் மயங்கி விழுந்து இறந்தார்

கோலாலம்பூர்: இன்று காலை கெடாவின் கூலிம், சுங்கை கோப், தாமான் முத்தியாராவில் உள்ள தனது வீட்டில், உடற்பயிற்சி செய்யும் நோக்கத்தில் வீட்டை சுற்றி சைக்கிள் ஓட்டிய ஆடவர் (52) வீட்டின் முன் மயங்கி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட ஆடவர், கடந்த ஆகஸ்ட் 28 அன்று கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றிருந்தார் என்றும் லேசான உடற்பயிற்சி செய்ய எண்ணி சைக்கிள் ஓட்டியவர் பின்னர் திடீரென வீட்டின் முன் மயங்கி விழுந்தார்.

கூலிம் மாவட்ட காவல்துறைத் தலைவர் சசாலி ஆதாம் இச்சம்பவம் பற்றிக் கூறுகையில், சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவமனை ஊழியர்கள் பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டதாகக் கூறினார்கள் என்றார்.

“பாதிக்கப்பட்டவருக்கு நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் இருப்பதையும், அவர் இதற்கு முன் இரண்டு டோஸ் தடுப்பூசியைப் பெற்றிருப்பதும் விசாரணைகளில் கண்டறியப்பட்டது.

“அது தவிர, மேலதிக பரிசோதனையில் பாதிக்கப்பட்டவர் கடந்த ஆகஸ்ட் 28 அன்று கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, பின்னர் குணமடைந்தார்” என்று அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவர் தனது வீட்டைச் சுற்றி ஒரு சைக்கிளை மிதித்துச் சென்றார் என்றும் பின்னர் மயங்கி விழுந்த சம்பவத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் அவருக்கு சுவாச உதவி (CPR) கொடுக்க முயன்றனர் என்றும் அதன் பின்னர் அம்புலன்ஸ்கு அழைப்பினை ஏற்படுத்தினார்கள் என்றும் கூறினார்.

இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டதாகவும் சாசாலி கூறினார்.

உயிரிழந்தவரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறியும் பொருட்டு, உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here