கோலாலம்பூர்: ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் தடுப்பூசி போடாத 779 ஜோகூர் ஆசிரியர்களை சந்தித்த பிறகு, அவர்களில் 383 பேர் கர்ப்பமாக இருப்பதாகவும் ஏனையோர் ஒவ்வாமை மற்றும் பிற உடல்நலக் கோளாறுகள் காரணமாக தங்கள் நியமனங்களை தாமதப்படுத்தியதாக அவர் கூறினார்.
ஏனைய 396 பேர் தடுப்பூசியைப் பற்றி “சந்தேகம்” காரணமாக நிராகரித்தனர் என்றும்
ஒரு பேஸ்புக் பதிவில் தெரிவித்தார். மேலும் மாநில சுகாதார இயக்குநர் டாக்டர் அமான் ராபு மற்றும் பிற ஜோகூர் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பிறகு, பல ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஒப்புக்கொண்டதாக கூறினார்.
“கூட்டத்தில், ஜோகூர் மாநிலத்தில் தடுப்பூசி திட்டம் மற்றும் ஜோகூரில் கோவிட் -19 தொற்றுநோயின் தற்போதைய நிலைமை பற்றிய தகவல்களையும் பகிர்ந்து கொண்டேன் “ என்றும் அவர் அப்பதிவில் தெரிவித்தார்.
குழந்தைகளுக்கு முன்மாதிரியாக ஆசிரியர்கள் தங்கள் பொறுப்புகளை அறிந்திருப்பார்கள் என்று நம்புகிறேன் என்றும், “மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக பள்ளிகள் மீண்டும் திறப்பதற்கு முன்பு (அக்டோபர் 2 ம் தேதி) தடுப்பூசி போடப்படும்” என்றும் அவர் கூறினார்.
அவரது தந்தையான சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர் இந்த வார தொடக்கத்தில் இதே போன்ற கருத்துக்களை தெரிவித்திருந்தார், மேலும் மாநிலத்தில் உள்ள மக்கள் தடுப்பூசி செலுத்துக்கொள்ளாதவர்களின் செல்வாக்கிற்கு ஆளாக வேண்டாம் என்று வலியுறுத்தினார்.
“அனைத்து ஜோகூர் வாசிகளும் விரைவில் தடுப்பூசி போடப்படுவார்கள் என்று நான் நம்புகிறேன், மேலும் தடுப்பூசி சீக்கிரமாக போட்டுக்கொண்டால் மட்டுமே எங்கள் வேலைகள், வணிகங்கள் மற்றும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும்,” என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.