பெட்டாலிங் ஜெயா: பேராக், கோப்பெங் காவல் நிலையம் முன்பு போலீஸ் ரோந்து காரில் ஏறி நின்று பெரிய அரிவாள் கம்பத்தை கூச்சலிட்டபடி ஆவேசமாக இருந்த ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
இன்று காலை 8 மணியளவில் நடந்த சம்பவத்தில், 60 வயதிற்குட்பட்டவர் என்று கூறப்படும் நபர், அவர் மீது தண்ணீர் தெளித்த தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் (JBPM) உதவியுடன் போலீஸ் கைது செய்தது.
கோப்பெங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தை (IPD) தொடர்பு கொண்டபோது, அவர்கள் அந்த நபரை கைது செய்துள்ளதாகவும், அது தொடர்பான அறிக்கை விசாரணையின் பின்னரே வெளியிடப்படும் என்றும் தெரிவித்தனர்.
வைரலானா ஒரு வீடியோவில், போலீஸ் ரோந்து காரில் நின்று கொண்டிருந்தவர், ஏதோ கூச்சலிட்டபடி அரிவாளை வீசினார். பின்னர் அவரை தீயாணைப்பு படையினரின் உதவியுடன் போலீசார் கைது செய்தது பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.




















