ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் அமைத்துள்ள அரசை சீனா அங்கீகரித்துள்ளடன் 31 மில்லியன் டாலர் உதவி வழங்கவுள்ளதாகவும் கூறியுள்ளது.
31 மில்லியன் டாலர் மதிப்புக்கு ஆப்கானிஸ்தானுக்கு உணவுப் பொருட்கள், தடுப்பூசிகள் என்பன போன்ற உதவிகளை வழங்கவுள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்திற்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்திருந்தது. இக்கூட்டத்தில் சீனா,பாகிஸ்தான், ஈரான், தஜிகிஸ்தான், துருக்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாட்டு அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இதன் பின் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி, “ஆப்கானிஸ்தானிற்கு தேவையான உதவிகளை தங்கள் நாடு வழங்கும். ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ தாலிபான்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம்” என அவர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்திற்கு ரஷ்யாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்நாட்டு அமைச்சர் பங்கேற்கவில்லை.
ஆப்கானிஸ்தானிலோ தாலிபான்களுக்கு எதிராகவும் அவர்களுக்கு ஆதரவு தரும் பாகிஸ்தானுக்கு எதிராகவும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.