“கண்ணீர் தேசம்”.. கையில் காசில்லை.. பசிகொடுமை..

காபூல்: ஆப்கானில் பொருளாதாரம் மோசமாகிவிட்டதால், வீட்டு பொருட்களை தெருக்களில் வந்து விற்று சாப்பிடும் நிலைமைக்கு அந்நாட்டு மக்கள் ஆளாகி உள்ளனர்.. அத்துடன், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் ஏறிவிட்டதால், மக்கள் பெரும் துயரத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

தலிபான்கள் ஆட்சியை தற்போது நடத்த துவங்கிவிட்டாலும், அந்த நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து மோசமடைந்து கொண்டிருக்கிறது.. காரணம், பல்வேறு நாடுகள் அந்நாட்டுடனான தூதரக உறவை ஏற்கனவே முறித்து கொண்டன… பல்வேறு உலக நாடுகள் ஆப்கனை தனிமைப்படுத்தியும் விட்டன.

இதுவே கடுமையான பொருளாதார நெருக்கடியை அங்கு ஏற்படுத்தி விட்டது.. நாட்டின் நாணய கொள்கையும் பலவீனமடைந்து வருகிறது. இதையடுத்து, தலிபான் அரசாங்கமானது, வெளிநாட்டு நிதியை மட்டுமே நம்பி இருக்கும் நிலைமைக்கு வந்துவிட்டது.

அதாவது அமெரிக்கா 9400 கோடி டாலர்கள் ரிசர்வ்வை வங்கியிலிருந்து நிறுத்தி வைத்து விட்டது.. சர்வதேச நிதியம், உலக வங்கிகளும் ஆப்கானிஸ்தானுக்கு நிதியுதவி வழங்குவதை நிறுத்திவிட்டன… தலிபான்கள் சொத்துக்கள் முடக்கப்படும் என்று 39 நாடுகளை கொண்ட நிதி தடுப்பு குழுவும் எச்சரிக்கை விடுத்துவிட்டது.

அவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை.. கையில் காசும் இல்லை.. இதனால், பட்டினியாலும், பணமில்லாமலும் வறுமையில் சிக்கி திணறி வருகிறார்கள்.. இப்போது நிலைமை என்னவென்றால், தலிபான்கள் காபூல் நகரைக் கைப்பற்றியபிறகு, தங்களின் சேமிப்பை வங்கியிலிருந்து எடுக்க முயன்றும் ஏராளமானோரின் முயற்சி தோல்வியில்தான் முடிந்துள்ளது..

தலிபான்களுக்கு பயந்து கொண்டு வங்கிகளை பூட்டியுள்ளனர்.. இதனால் தாங்கள் பாடுபட்ட சேமித்த பணத்தைக்கூட வங்கியிலிருந்து எடுக்க முடியாத அளவுக்கு காபூல் மக்கள் துயரத்தில் உள்ளனர்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here