மலேசியாவில் புதன்கிழமை (செப்டம்பர் 22) 14,990 புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுகாதார தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், நாட்டின் ஒட்டுமொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 2,142,924 ஆக உள்ளது.
சிலாங்கூர் 2,414 புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகளுடன் அதிக தினசரி எண்ணிக்கையைப் பதிவு செய்தது.அதைத் தொடர்ந்து ஜோகூர் (1,880). சரவாக் (1,712), கிளந்தான் (1,573), பேராக் (1,490), பினாங்கு (1,224), சபா (1,199), கெடா (1,007), தேரெங்கானு (852), பகாங் (688), கோலாலம்பூர் (338), மலாக்கா (313), நெகிரி செம்பிலான் (170), பெர்லிஸ் (97), புத்ரா ஜெயா (30) மற்றும் லாபுவான் (3).



















