21 வயதிற்குள் உலக நாடுகள் அனைத்திற்கும் பயணம் செய்த பெண்; கின்னஸ் இல் இடம்பிடித்தார்

உலகின் அனைத்து நாடுகளுக்கும் (196) பயணம் செய்த இளம் வயது பெண் என அமெரிக்காவை சேர்ந்த லெக்ஸி அல்ஃபோர்ட்(21) கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

இவர் தனது 18 வயதிலேயே 70-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன் மூலம் நடப்பிலிருந்த உலக சாதனையை படைத்த பிரிட்டிஷ் நாட்டவரான ஜேம்ஸ் அஸ்கித் (24) என்பவரது சாதனையை முறியடித்தார்.

மேலும் லெக்ஸி தனது இந்தப்பயணத்தினை நிறைவு செய்யும் பொருட்டு வடகொரியாவை அணுக மிகவும் சிரமப்பட்டதாக கூறினார். இருப்பினும் வட கொரியா மற்றும் தென்கொரியாவின் இராணுவமயமாக்கப்பட்ட மண்டலமான DMZ என அழைக்கப்படும் இடத்தில் தனது பயணத்தை முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here