பினாங்கில் 200 கிலோ உலர்ந்த மலர் மொட்டுகள் மற்றும் இலைகள் கடத்தும் முயற்சி முறியடிப்பு; மக்கிஸ் தகவல்

பட்டர்வொர்த்: பினாங்கு பட்டர்வொர்த் வார்ஃப் (wharf) கிடங்கில் சுமார் 5,000 வெள்ளி மதிப்புள்ள விவசாய பொருட்களை கடத்தும் முயற்சியை மலேசிய தனிமைப்படுத்தல் மற்றும் ஆய்வு சேவைகள் துறை (Maqis) முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

பினாங்கு மக்கிஸ் இயக்குநர் ஜரினா ராம்லி கூறுகையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக நம்பப்படும் 200 கிலோ உலர்ந்த மலர் மொட்டுகள் மற்றும் இலைகள் 5,000 வெள்ளி மதிப்புள்ளவை என தனது அமலாக்க அதிகாரிகள் கண்டறிந்தனர் என்றார்.

காய்ந்த பூ மொட்டுகள் செம்பருத்தி மலர்கள் மற்றும் காய்ந்த இலைகள் முருங்கை இலைகள் என்பன இருந்ததாக அவர் கூறினார்.

இறக்குமதி அனுமதி உட்பட செல்லுபடியாகும் ஆவணங்களை இறக்குமதியாளர் சமர்ப்பிக்கத் தவறியதால், அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக அந்தப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.

“செல்லுபடியாகும் அனுமதி இல்லாமல் விவசாய பொருட்களை இறக்குமதி செய்யும் செயல் பிரிவு 11 (1), மலேசிய தனிமைப்படுத்தல் மற்றும் ஆய்வு சேவைகள் சட்டம் 2011 [சட்டம் 728] ஆகியவற்றின் கீழ் இது குற்றம் ஆகும்.

“குற்றம் நிரூபிக்கப்பட்டால், நிறுவனத்திற்கு 1,000 வெள்ளிக்கு மேல் அபராதம் விதிக்கப்படலாம் அல்லது ஆறு வருடங்களுக்கு மிகாமல் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்” என்று அவர் வெள்ளிக்கிழமை (செப். 24) ஓர் அறிக்கையில் கூறினார்.

உணவு பாதுகாப்பு, நோய் கட்டுப்பாடு மற்றும் நாட்டின் வேளாண்மை தொழிற்துறையை அச்சுறுத்தும் பூச்சி நுழையும் அபாயம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து எல்லை அமலாக்க நிறுவனங்களுடன் மக்கிஸ் எப்போதும் தீவிர நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் ஜரினா கூறினார்.

மேலும் “உணவு பாதுகாப்பு உத்தரவாதத்தை உறுதி செய்ய, சட்ட அமலாக்க நடவடிக்கை தொடர்ந்து வலுப்படுத்தப்படும்,” என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here