விஜய் தொலைக்காட்சியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சி. தமிழ் ரசிகர்கள் மத்தியில் இதற்கென தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்த நிகழ்ச்சி கடந்த 6 சீசன்களாக வெற்றி நடை போட்டுள்ளது. அதனால் இந்த சீசனும் மக்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகிறார்கள்.
இந்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சி வரும் அக்டோபர் 1 தொடங்கவிருக்கிறது. எனினும், இவர் கள்தான் போட்டியாளர்கள் என்னும் அதிகாரபூர்வ அறிவிப்புகள் கிடைக்கப்ப டவில்லை. எனினும், மற்ற சீசன்களை விட இந்த சீசன் பிக் பாஸ் முற்றிலும் மாறு பட்டு இருக்கப்போகிறது.

இந்த சீசனில் பப்லூ பிரித்விராஜ், ஜாக்குலின், மாகாபா ஆனந்த், பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா, தர்ஷா குப்தா, டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர், செய்திவாசிப்பாளர் ரஞ்சித் என பல பேர் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது. இவர்களுள் கண்டிப்பாக அதிகப் படியான பேர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள் எனவும் தெரிகிறது.

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது பாலிவுட் சினிமாவில் முக்கிய நடிகை களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை மீரா சோப்ரா. தற்போது மீரா சோப்ரா பிக் பாஸில் கலந்து கொள்ள போகிறார் என சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“இவுங்க வந்தா கண்டிப்பா பிக் பாஸ் வேற லெவல் போயிடும். ஏன்னா அவுங்களுக்கு அவ்ளோ ரசிகர் இருக்காங்க. அதை தவிர்த்து இன்னும் நெறய விஷயங்கள் இருக்கு” என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றார்கள்
கடந்த 2005 ஆம் ஆண்டு நடிகர், இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளி யான ‘அன்பே ஆருயிரே’ திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை மீரா சோப்ரா. இவரின் முதல் படமே வெற்றி படம் தான்.
அதுவும் தனது முதல் படத்திலேயே கவர்ச்சி காட்டி நடித்து தமிழ் இளைஞர்களின் மனதை கொள்ளையடித்து விட்டார். இப்படத்தின் வெற்றியை அடுத்து மீராவுக்கு தமிழில் தொடர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஜாம்பவான், லீ, அர்ஜுன் நடித்த மருதமலை, சிம்புவுடன் காளை உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்து இளை ஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தார்.
மற்ற சீசனில் அந்த போட்டியாளர்கள் சமாளித்ததை போல இவரும் சமாளித்து விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் இந்த சீசன் பிக் பாஸில் வரு வாரா மாட்டாரா என பொறுத்திருந்து பார்க்கலாம். தற்போது இவரது புகைப் படங் கள் இணையத்தை கலக்கி வருகிறது.




















