Anemia | இந்த 5 உணவுகளை சாப்பிட்டாலே போதும்… இரத்த சோகை இனி இருக்காது

இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்க உங்கள் உணவில் புரோபயோடிக் நிறைந்த உணவுகளைச் சேர்க்கலாம்.இரத்த சோகை என்பது உங்கள் இரத்தத்தில் போதுமான சிவப்பு இரத்த அணுக்கள் இல்லாத ஒரு நிலை ஆகும். இது உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனை எடுத்துச் செல்வதை இரத்தம் கட்டுப்படுத்துகிறது. உங்களுக்கு இரத்த சோகை இருந்தால், நீங்கள் எப்போதும் சோர்வாக உணருவீர்கள்.

சில சமயங்களில் ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, மூச்சுத் திணறல், தலைசுற்றல், நெஞ்சு வலி மற்றும் குளிர்ந்த நிலையில் கைகள் மற்றும் கால்களையும் நீங்கள் உணரலாம். உங்கள் தோல் வெளிர் மற்றும் மஞ்சள் நிறமாகவும் தோன்றலாம். இதற்கு முறையான சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இரத்த சோகை உங்களை மிகவும் சோர்வடையச் செய்யும் மற்றும் இதய நோய்களைத் தூண்டும்.

சில சந்தர்ப்பங்களில், அது மிகவும் கடுமையான நிலையை அடைந்தால் அது உயிருக்கு ஆபத்தாகவும் மாறும். கடுமையான இரத்த சோகை இக்காலத்தில் ஒரு பொதுவான நிலை, குறிப்பாக பெண்களுக்கு, அதை கையாளும் வழிகள் பற்றி நிறைய பேருக்கு இன்னும் சரியான புரிதல் கிடையாது. இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்க இரும்புச் சத்துக்களை கொண்ட உணவுகளை அதிகம் உட்கொள்வது மிகவும் பொதுவான வழியாகும். இரத்த சோகையைத் தடுக்க உதவும் பிற இயற்கை முறைகள் உள்ளன. அவை குறித்து தெரிந்து கொள்வோம்.

இரத்த சோகையை எதிர்த்துப் போராட உதவும் உணவு வகைகள்: பச்சை இலை காய்கறிகள்: கீரைகளில் இயற்கையாகவே அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

இரத்த சோகைக்கு, பச்சை இலை காய்கறிகள் மிகவும் நல்லது. இரத்த சோகைக்கு சிகிச்சையளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இரும்புச்சத்து இயற்கையாகவே கீரைகளுக்கு அதிகம் உண்டு. நீங்கள் பச்சை இலை காய்கறிகளுடன் சாலட் தயார் செய்யலாம்.

வைட்டமின் சி: இரத்த சோகை பிரச்சனையில் இருந்து மீள இரும்புச்சத்து உணவுகளை மட்டும் உட்கொள்வது போதாது, நீங்கள் உட்கொள்ளும் இரும்புச்சத்து உணவை உங்கள் உடல் உறிஞ்ச முடிகிறது என்பதையும் உறுதி செய்ய வேண்டும். வைட்டமின் சி நிறைந்த உணவுகள் இரும்புச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்தும்.

இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்க நீங்கள் இரும்புச் சத்துக்களை எடுத்துக் கொண்டால், அதனுடன் போதுமான அளவு வைட்டமின் சி நிறைந்த பழங்களையும் உட்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அனைத்து சிட்ரிக் பழங்களிலும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. வைட்டமின் சி-யின் சில நல்ல ஆதாரங்களில் எலுமிச்சை, ஆரஞ்சு, ஸ்ட்ராபெரி, கிவி போன்ற பழங்கள் உள்ளன. சில பச்சை இலை காய்கறிகளிலும் வைட்டமின் சி சத்து உள்ளது.

பாதாம்: இரத்த சோகை பிரச்சனையை போக்க பாதாம் பருப்பு அற்புதங்களைச் செய்யும். உங்கள் அன்றாட உணவில் பாதாம் சேர்க்கலாம். பாதாமில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இரத்த சோகை போன்ற நிலைமைகளுக்கு 4 முதல் 5 பாதாம் பருப்பை இரவில் தண்ணீரில் ஊறவைத்து காலையில் அதன் தோளை நீக்கிவிட்டு உண்ணுதல் மிகவும் நன்மை பயக்கும். பாதாம் உங்கள் இதய ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.

புரோபயோடிக்குகள்: புரோபயோடிக்குகள் நல்ல பாக்டீரியா உள்ளடக்கத்திற்கு நன்கு அறியப்பட்டவை. இது குடல் ஆரோக்கியத்திற்கும் செரிமானத்திற்கும் நல்லது. இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்க உங்கள் உணவில் புரோபயோடிக் நிறைந்த உணவுகளைச் சேர்க்கலாம். புரோபயோடிக்குகள் வைட்டமின் பி12 மற்றும் இரும்புச்சத்தின் அளவை அதிகரிக்க உதவும். தயிரை தினமும் இதற்கு உட்கொள்வது நல்லது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here