தீபாவளி: வரும் நாட்களில் சிங்கப்பூர் சோதனைச் சாவடி மிகக் கடுமையான நெரிசலாக இருக்கும்

பெட்டாலிங் ஜெயா:

சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனைச் சாவடிகள் நவம்பர் 9 முதல் 14 வரை மிக அதிக போக்குவரத்து நெரிசலாக இருக்கும் எதிர்பார்ப்பதாக அதன் குடி வரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது. நீண்ட நாள் தீபாவளி வார விடுமுறை மற்றும் ஆண்டு இறுதி பள்ளி விடுமுறைகள் வருகின்றமை இதற்கான காரணம் என்கிறது ICA.

கடந்த அக்டோபர் 6 முதல் 8 வரையிலான நாட்களில் சிறுவர் தின வார இறுதியில் கூட 1.27 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் நில சோதனைச் சாவடிகளைப் பயன்படுத்தியதாக ICA இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் 2022ல் எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டதிலிருந்து நிலச் சோதனைச் சாவடிகள் வழியாக அதிக எண்ணிக்கையிலான பயணிகள் கடந்து செல்வதைக் கண் டதாக ICA கூறியது. அன்று மட்டும் சுமார் 260,000 பேர் பயணித்திருந்தனர். காரில் சென்றவர்கள் குறைந்தது மூன்று மணிநேரம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது” என்கிறது ICA.

இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பு நடவ டிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே பயணிகள் குடியேற்ற அனுமதிக்கான கூடுதல் காத்திருப்பு நேரத்தைக் கருத் தில் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

“பொறுமையாக இருப்பதற்கும், போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிப்பதற்கும், வீதி ஒழுங்கை பேணுவதற்கும், நிலச் சோதனைச் சாவடிகளைப் பயன்படுத்தும் போது அதிகாரிகளுடன் ஒத்துழைப்பதற்கும் பயணிகளின் புரிதலையும் ஒத்துழைப்பையும் நாங்கள் நாடுகிறோம் என்கிறது ICA.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here