கிள்ளான் ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி விழா

புரட்டாசி மாதம் என்றால் நமக்கு முதலில் நினைவிற்கு வரும் பெருமாள் தான் என்றால் அது மிகையாகாது. அந்த வகையில் அனைத்து பெருமாள் ஆலயங்களிலும் ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் தென்கிழக்காசிய திருப்பதி என்று போற்றப்படுவதும் மலேசியாவின் முதல் கருங்கல் ஆலயமுமான கிள்ளான் ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி மாத மிக விமரிசையான முறையிலும் அதே வேளை அரசாங்கத்தின் எம்சிஓவை (MCO) கடைபிடித்து பூஜைகள் நடைபெற்று வருவதாக ஆலயத் தலைவர் சங்கரத்னா சித.ஆனந்தகிருஷ்ணன் தெரிவித்தார்.

புரட்டாசி மாதமே மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதிலும்  புரட்டாசி சனிக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்தது. சென்ற வாரம் 2ஆவது சனிக்கிழமை லிட்டில் கேட்டரிங் உரிமையாளர் சண்முகம்@ ஷான் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் பக்தர்களால்  மிகவும் சிறப்பான நாளாக அமைந்தது.

அதே போல் நாளை 3ஆவது சனிக்கிழமை விடியற்காலை சிவன் சன்னதியில் சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து கோ பூஜை உள்ளிட்ட விஷேச பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் கலந்து கொண்டு எம்பெருமாளின் அருளை பெற்றுய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here