அறிமுகமாகிறது உலகின் முதல் கோவிட் மாத்திரை; அமெரிக்க நிறுவனமான மெர்க் அன்ட் கோ அனுமதி கேட்டு விண்ணப்பம்

உலக நாடுகளில் அமெரிக்காவிலேயே கோவிட்-19 வைரஸால் அதிகம் பாதிப்புக்கள் ஏற்பட்டன. இந்நிலையில் கோவிட்-19 எதிராக உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசியை செலுத்தி வருகின்றது. தற்பொழுது அமெரிக்காவில் புதிதாக கோவிட்-19 க்கு எதிராக மாத்திரை கண்டுபிடித்துள்ளதுடன் அவற்றை பயன்படுத்த அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள மருந்து தயாரிக்கும் நிறுவனமான மெர்க் அன்ட் கோ என்ற நிறுவனம் புதிதாக கண்டு பிடித்த கோவிட் வைரசுக்கு எதிரான மாத்திரை, கோவிட் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கடுமையாக சுகவீனம் ஏற்பட்டிருப்பவர்களது எண்ணிக்கையை அரைவாசியாக குறைக்கும் என்றும் இதனால் இறப்பு விகிதமும் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் -19 வைரஸின் மரபணுவின் குறியீட்டில் பிழைகளை ஏற்படுத்தும் இந்த “மோல்னுபிறவிர்”என்ற மாத்திர அரசின் அனுமதியை பெற்றால் இதுவே உலகில் முதல் முதலில் அனுமதிக்கப்பட்ட வாய் மூலம் எடுத்துக் கொள்ளப்படும் கோவிட் வைரஸுக்கான மருந்து என்ற பெயரை பெறும் என்பதில் ஐயமில்லை.

இந்த மருத்துக்கான அனுமதியை விரைவாக பெறுவதற்கு தாம் செயல்பாடு வருவதாக மெர்க் அன்ட் பார்ட்னர் ரிட்ஜ்பாக், தெரிவித்ததுடன் மேலும் இந்த மாத்திரையை உலக அளவில் பயன்படுத்தவும் அனுமதியை பெற விண்ணப்பம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here