நாட்டின் வயது வந்தோரில் 87.2 விழுக்காட்டினர் முழுமையாக தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்

கோலாலம்பூர்: நேற்றைய நிலவரப்படி, நாட்டிலுள்ள வயது வந்தோரில் (adults) மொத்தம் 20,418,495 பேர் அல்லது வந்தோரில் 87.2 விழுக்காட்டினர் , கோவிட் -19 எதிராக தடுப்பூசியை செலுத்தியுள்ளனர்.

இது மாநிலங்களுக்கு இடையேயான பயணத்தை அனுமதிக்கும் இலக்கை அடைவதற்கு 2.8 விழுக்காடு குறைவாகும்.

சுகாதார அமைச்சின் தரவுகளின் அடிப்படையில், 94.3 விழுக்காட்டினர் அல்லது 22,070,545 வயதுவந்தவர்கள் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 12 முதல் 17 வயதிற்குட்பட்டவர்களில் 3 விழுக்காட்டினர் அல்லது 92,949 இளம் பருவத்தினர் தங்களது தடுப்பூசியை முடித்துள்ளனர்.

நேற்று மொத்தம் 211,517 தடுப்பூசிகள்வழங்கப்பட்டது, 89,695 முதல் டோஸ்களும் 121,822 இரண்டாவது டோஸ்களுக் வழங்கப்பட்டது, தேசிய கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் (PICK) கீழ் நிர்வகிக்கப்படும் தடுப்பூசிகளில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட அளவுகளின் எண்ணிக்கை 44,145,505 ஆக உள்ளது.

கோவிட் -19 பரவுவதைத் தடுக்க இந்த ஆண்டு பிப்ரவரி 24 அன்று PICK தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here