கோலாலம்பூர் : லாயாங்-லாயாங்கில் உள்ள ஒரு தோட்டத்தில் 23 வயதான பாதுகாவலர் ஒருவர் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஜோகூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், திங்கட்கிழமை (அக்டோபர் 4) காலை 8.45 மணியளவில் ரெங்காம் தீயணைப்பு நிலையத்திற்கு இந்த சம்பவம் குறித்த அறிக்கை கிடைத்தது என்றார்.
“காணாமல் போனவர் லாடாங் உலு ரெமிஸ், லாயாங்-லாயாங்கில் ஒரு தோட்டத்தில் பாதுகாவலராக பணிபுரிகிறார்.”
“காலை 7 மணியளவில் அவர் பணியில் இருந்திருக்க வேண்டும் ஆனால் அவர் அங்கு இல்லை. அதன் பின்னரே அவருடைய நண்பர் அவரை காணவில்லை என்பதை உணர்ந்தார்,” என்று அவர் கூறினார்.
காணாமல்போன நபரைத் தேடும் பணியில் 82 தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர், துணை போலீசார் மற்றும் உள்ளூர் மக்கள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர் என்றும் தீயணைப்பு மற்றும் துறை செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.