கூலாய், பெப்ரவரி 18 :
ஜோகூரில் உள்ள மசூதிகள் மற்றும் சூராவ்களில் எந்தவொரு அரசியல் நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படவில்லை என்று ஜோகூர் இஸ்லாமிய மத விவகாரக் குழுவின் தலைவர் தோஸ்ரின் ஜார்வந்தி தெரிவித்துள்ளார்.
இந்த முடிவை ஜோகூர் இஸ்லாமிய மதத் துறையின் (JAINJ) மசூதி மற்றும் சூராவ் நிர்வாகப் பிரிவு எடுத்துள்ளது என்றார்.
அந்தந்த பகுதியில் உள்ள மசூதிகள் மற்றும் சூராவ்களை அரசியல் தலைவர்கள் உட்பட ஏனையோராலும் அரசியல் நடவடிக்கைகளுக்கான இடமாகப் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்வது மாவட்ட காடியின் பொறுப்பாகும் என்று அவர் கூறினார்.
“JAINJ இன் மசூதி மற்றும் சூராவ் நிர்வாகப் பிரிவு, அரசாங்கத்தின் எந்த அரசியல் தலைவர்களும், மசூதிகள் மற்றும் சூராவை எந்த அரசியல் நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது,” என்று அவர் இன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
























