கோலாலம்பூர்: கோலாலம்பூரில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்தில், நள்ளிரவு போலீசார் மேற்கொண்ட சோதனையைத் தொடர்ந்து கோவிட் -19 எஸ்ஓபிகளை மீறியதற்காக மொத்தமாக 112 பேருக்கு எதிராக 580,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
பொழுதுபோக்கு மையத்தின் உரிமையாளருக்கு 25,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.
கோலாலம்பூர் குற்றத் தடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறைத் தலைவர் அஸ்மான் அயோப் தலைமையிலான இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்களில் 6 பேர் போதை மருந்து எடுத்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும் திறக்கப்படாத 37 பாட்டில்கள் உட்பட 80 மதுபாட்டில்களையும் போலீசார் கைப்பற்றினர்.
“கோவிட் -19 பரவுவதைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு உதவ இதுபோன்ற சோதனைகள் அவ்வப்போது அதிகரிக்கும்” என்று அஸ்மான் ஒரு அறிக்கையில் கூறினார்.
பார்கள் மற்றும் இரவு விடுதிகள் தேசிய மீட்பு திட்டத்தின் 3 வது கட்டத்தின் கீழ் செயல்படுவதற்கு இன்னும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஜோகூரில் உள்ள மூன்று பொழுதுபோக்கு நிலைய உரிமையாளர்கள், அவர்களின் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் நேற்று SOP களை மீறியதற்காக 357,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.