கோலாலம்பூர், அக்டோபர் 21 :
சினோவாக் தடுப்பூசிகளின் இரு அளவுகளை பெற்றுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியாக ஃபைசர் தடுப்பூசியை செலுத்தவுள்ளதாக கைரி ஜமாலுடின் கூறினார்.
இந்த திட்டம் நாளை தொடங்கும் என்றும், வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வகையில் தடுப்பூசிக்கு “மிக்ஸ் அண்ட் மேட்ச்” எனப்படும் அணுகுமுறைக்கு உலக சுகாதார அமைப்பு (WHO) ஒப்புதல் அளித்துள்ளது என்றும் சுகாதார அமைச்சர் கூறினார்.
பூஸ்டர் டோஸுக்கு தகுதியானவர்களுக்கு மைசெஜாத்ரா செயலி மற்றும் SMS மூலம் அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.
மேலும் பூஸ்டர் டோஸ் முற்றிலும் தன்னார்வமானது என்றும் கைரி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.





















