முன்னாள் பிரதமர் முஹிடின் மற்றும் அவரின் துணைவியார், கோவிட்-19 பூஸ்டர் தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டனர்

கோலாலம்பூர், அக்டோபர் 23:

முன்னாள் பிரதமரும் தேசிய மீட்பு கவுன்சில் தலைவருமான டான் ஸ்ரீ முஹிடின் யாசின் மற்றும் அவரது மனைவி புவான் ஸ்ரீ நூரைனி அப்துல் ரஹ்மான் ஆகியோர் இங்குள்ள ஆக்சியாடா அரினா தடுப்பூசி மையத்தில் இன்று கோவிட் -19 பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர்.

முஹிடின், (74), மற்றும் நூரைனி, (69) , ஆகியோர் காலை 9.35 மணிக்கு அந்த தடுப்பூசி மையத்திற்கு வந்து, காலை 10 மணியளவில் ஃபைசர் வகை பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டனர்.

தடுப்பூசியின் பின்னரான கண்காணிப்புக் காலம் முடிவடையும் வரை அவர்கள் காத்திருந்தபோது, ​​அதே காத்திருப்பு அறையில் தடுப்பூசி போட்டு முடித்த சில வாலிபர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். அது தொடர்பான புகைப்படங்களையும் அவர் தனது முகநூலில் பதிவேற்றம் செய்திருந்தார்.

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது, ​​முன்னாள் பிரதமர் மையத்தில் தடுப்பூசி போடும் செயல்முறை நன்றாக நடந்து கொண்டிருப்பதாகவும், தடுப்பூசி செலுத்திய பின்னர் தான் எந்த உடனடி விளைவுகளை அனுபவிக்கவில்லை என்றும் கூறினார்.

பூஸ்டர் தடுப்பூசியைப் பெறுவதற்கு அவர் சில நாட்களுக்கு முன்பு MySejahtera விண்ணப்பத்தின் மூலம் தானாக முன்வந்து முற்பதிவு செய்தார் என்றார் .

“பூஸ்டர் தடுப்பூசியைப் பெறுவதற்காக ,சுகாதார அமைச்சகத்திடம் நானே அழைப்பு செய்து பேசினேன் , மேலும் நான் இன்று வரலாம் என்றும் கூறினேன்,” என்று அவர் கூறினார், அவர் 74 வயதாக இருப்பதால் பாதுகாப்பை அதிகரிக்க பூஸ்டர் டோஸை நாடினார்’ என்றார் .

மேலும் பொதுமக்களுக்கு கோவிட் -19 தடுப்பு குறித்த நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை தொடர்ந்தும் கடைபிடிக்குமாறும் முஹிடின் நினைவூட்டினார்.

பெரும்பாலான மாநிலங்கள் தற்போது தேசிய மீட்புத் திட்டத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் கட்டத்தில் உள்ளன. UK போன்ற சில நாடுகளில் புதிய தொற்றுகள் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளன, மலேசியர்கள் இதை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்,” என்றும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here