சிங்கப்பூரில் ஒரு மலேசிய ஆடவர் உள்ளிட்ட 16 பேர் நேற்று கோவிட் தொற்றினால் பலி

சிங்கப்பூரில் நேற்று கோவிட் -19 காரணமாக சிக்கல்களால் இறந்த 16 பேரில் ஒரு மலேசிய  ஆடவரும் அடங்குவார். சிங்கப்பூர் சுகாதார அமைச்சகத்தின் இரவு விவர புதுப்பிப்பில், மலேசியரான அவர் வேலை  அனுமதி வைத்திருப்பவர் என்று தகவல் தெரிவித்திருந்தது.

மீதமுள்ள 15 இறப்புகளில், நான்கு சிங்கப்பூர் பெண்களும், 9 பேர் சிங்கப்பூர் ஆண்கள்  மற்றும் 2 பேர் நிரந்தர வசிப்பிட அந்தஸ்தை பெற்றவர்கள் என அமைச்சகம் தெரிவித்துள்ளது. அனைத்து இறப்புகளும் 61 முதல் 93 வயதுடைய மூத்த குடிமக்கள் சம்பந்தப்பட்டவை என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அவர்களில், எட்டு பேர் கோவிட் -19 தடுப்பூசி போடப்படவில்லை, ஒருவருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டது மற்றும் ஏழு பேருக்கு முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களாவர். அவர்களில் 15 பேருக்கு பல்வேறு அடிப்படை மருத்துவ நிலைகள் இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் இப்போது மொத்தம் 280 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது.

சிங்கப்பூரில் நேற்று 3,439 புதிய கோவிட் -19 தொற்றுகள் பதிவாகியுள்ளன. மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 162,026 ஆக உள்ளது. புதிய  தொற்றில் 2,937 சமூகத்தில் கண்டறியப்பட்டது. 500 புலம்பெயர்ந்த தொழிலாளர் தங்குமிடங்களில் மற்றும் இரண்டு இறக்குமதி செய்யப்பட்டவை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here