சிகாமட், அக்டோபர் 27:
நேற்று இரவு, இங்குள்ள சிகாமட்டில் 175 கிலோமீட்டர் தூரத்தில் ஜாலான் ஜோகூர் பாரு-சிரம்பானில் மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் காயமடைந்தார்.
பண்டார் பாரு சிகாமட் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் (BBP) தலைவர், துணைக் கண்காணிப்பாளர் மர்சுகி இஸ்மாயில் கூறுகையில், தீயணைப்பு துறைக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இரவு 8.30 மணியளவில் இவ் விபத்து ஏற்பட்டது, மேலும் Ford Fiesta, Mitsubishi Storm வகை கார்களும் ஒரு மோமோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானது.
மூத்த தீயணைப்பு அதிகாரி II கென்னி இஸ்மோல் அப்துல் ரஹ்மான் தலைமையில் BBP பண்டார் பாரு சிகாமட்டின் இரண்டு அவசரகால சேவைகள் உதவிப் பிரிவு (EMRS) உடன் 10 பேர் கொண்ட குழு ஒன்று அழைப்பைப் பெற்றதும் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார்.
“தீயணைப்பு மற்றும் மிட்பு குழு சம்பவ இடத்திற்கு வந்தவுடன், சம்பவ இடத்தில் நான்கு பேர் பாதிக்கப்பட்டிருந்ததை கண்டதாகவும், பின்னர் தீயணைப்பு வீரர்கள் வாகனத்தில் சிக்கிக் கொண்டிருந்த இரண்டு பாதிக்கப்பட்டவர்களை வாகனத்திலிருந்து வெளியே அகற்றினர்.
“Ford Fiesta காரில் பயணித்த 19 மற்றும் 20 வயதுடைய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் Mitsubishi Storm இல் பயணம் செய்த மற்றொரு 64 வயது நபர் செகாமாட் மாவட்ட மருத்துவமனையில் (HDS) சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறினார்.
மேலும் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற மற்றொரு 22 வயது இளைஞன் வலது இடுப்பில் சிறு காயங்களுக்கு உள்ளானதாகவும்,செகாமாட் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த வழக்கு மேலதிக நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார்.
“பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக HDS தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டது.
“மேலும் இரவு 10.35 மணிக்கு மீட்பு நடவடிக்கை முடிந்தது என்றும் விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது,” என்றும் அவர் கூறினார்.