ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,159 பேர் கோவிட் -19 தொற்று நோய்க்கு பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. அத்தோடு நாளாந்த கோவிட் -19 தொற்று பாதிப்பும் புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யா நாட்டில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 40,096 பேருக்கு கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவில் மாஸ்கோவில் மட்டும் 8,440 பேருக்கு கோவிட் -19 தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8,392,697 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.