கிளந்தானில் கடத்தப்பட்ட 21 நாய்க்குட்டிகளை விநியோகம் செய்ய முயற்சித்த ஆடவர் கைது

கோலாலம்பூர், அக்டோபர் 29 :

நேற்று கிளந்தான் மாநிலத்தில் 21 கடத்தல் நாய்க்குட்டிகளை விநியோகிக்கும் முயற்சி தடுக்கப்பட்டது. அத்துடன் சுமார் 168,000 வெள்ளி மதிப்புள்ள நாய்க்குட்டிகளை வைத்திருந்த அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.

நேற்றுக் காலை 6.30 மணியளவில் பொது நடவடிக்கைப் படையின் (GOF) உறுப்பினர்களால் ​​நான்கு சக்கர வாகனத்தில் பயணித்த போது அவர் கைது செய்யப்பட்டார்.

GOF ஒன்பதாவது பட்டாலியன் கட்டளை அதிகாரி கண்காணிப்பாளர் நூர் அஜிசன் யூசோப் கூறுகையில், ​​குபாங் ரம்புத்தான் பகுதியில் GOF உறுப்பினர்கள் தங்கள் வழக்கமான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தபோது, சட்டவிரோத படகுத்துறையில் ஒரு வாகனத்தை கண்டதாகவும், “அந்த வாகனம் சட்டவிரோத படகுத்துறையை விட்டு வெளியேறி இங்குள்ள குவா நேரிங் நோக்கி சென்று கொண்டிருந்தபோது GOF உறுப்பினர்களால் அந்த வாகன ஓட்டுநர் தடுத்து நிறுத்தப்பட்டார்.

“அவரது வாகனத்தை சோதனை செய்ததில், 21 நாய்க்குட்டிகள் அடங்கிய ஒன்பது கூண்டுகளை அவர்கள் கண்டுபிடித்தனர்,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில் கடத்தப்பட்ட இந்த விலங்குகள் அனைத்தும் உள்ளூர் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது என்று கூறினார்.

மேலும் உள்ளூர்வாசியான வாகன ஓட்டியை மேலதிக விசாரணைக்காக தடுத்து வைத்துள்ளதாகவும் 25,000 வெள்ளி மதிப்புள்ள நான்கு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட நாய்க்குட்டிகள் அனைத்தும் , மாநில மலேசிய தனிமைப்படுத்தல் மற்றும் ஆய்வு சேவைகள் துறையிடம் (Maqis) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here