கோலாலம்பூரில் உள்ள மளிகைக் கடைகள்,பல சரக்குக் கடைகள், சீன மருத்துவக் கடைகள் ஆகியவற்றில் மதுபானம் விற்பனை செய்வதற்கான தடை இன்று அமுல்படுத்தப்படவுள்ளது.
வாடிக்கையாளர்கள் இன்னும் இதுபோன்ற வளாகங்களில் பீர் வாங்க முடியும் என்றாலும், அவற்றை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே விற்க முடியும் என்று கோலாலம்பூர் மாநகர மன்றம் (டிபிகேஎல்) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பரில் அறிவிக்கப்பட்டு அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கவிருந்த தடை, டிபிகேஎல் நடத்தி வரும் ஆய்வுக்காக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.