கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

அலோர்ஸ்டார், நவம்பர் 4 :

இன்று காலை 8 மணி நிலவரப்படி 232 குடும்பங்களைச் சேர்ந்த 823 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், நேற்று 221 குடும்பங்களைச் சேர்ந்த 793 பேர் பாதிக்கப்பட்டு வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சமடைந்திருந்தனர்.

கெடா மாநிலத்தில் உள்ள நான்கு மாவட்டங்களான கோத்தாஸ்டார், பென்டாங், பொக்கோக் சேனா மற்றும் குபாங் பாசு ஆகிய இடங்களில் உள்ள 12 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் (PPS) பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.

கெடா சிவில் பாதுகாப்புப் படையின் (APM) பேரிடர் மேலாண்மைக் குழு செயலகப் பிரிவுத் தலைவர், மேஜர் (PA) முகமட் முவாஸ் முகமட் யூசாஃப் கூறுகையில், கோத்தாஸ்டார் மாவட்டத்தில் 117 குடும்பங்களைச் சேர்ந்த 382 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்,என்றும் அவர்கள் மாவட்டத்தில் உள்ள 6 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

PPS Sekolah Kebangsaan SK லாங்சாரில் இன்னும் 23 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேரும் , PPS SK சுகா மெனந்தி 25 குடும்பங்களைச் சேர்ந்த 67 பேரும் , SK தாருல் ஹிக்மா 32 குடும்பங்களைச் சேர்ந்த 118 பேரும் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

“PPS SK ஹாஜி வஹாப்பில் 8 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 33 பேரும், SK கான்வென்ட்டில் மொத்தம் 3 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 9 பேரும் மற்றும் SK தித்தி காஜாவில் மொத்தம் 26 குடும்பங்களைச் சேர்ந்த 75 பேரும் தஞ்சமடைந்துள்ளனர்.

“பெண்டாங் மாவட்டத்திலுள்ள 2 PPS களில் 76 குடும்பங்களைச் சேர்ந்த 293 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதாவது 54 குடும்பங்களைச் சேர்ந்த 225 பேர் மற்றும் PPS திவான் திவான் ரகன் சுக்கான் தானா மேராவிலும் , 22 குடும்பங்களைச் சேர்ந்த 68 பேர் PPS திவான் சென்டெரவாசி புலா சிராமையிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர் ,” என்று இன்று ஒரு அறிக்கையின் மூலம் தெரிவித்தார்.

Pokok Sena மாவட்டத்தில் இரண்டு PPS இல் மொத்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் உள்ளனர், மொத்தம் 14 குடும்பங்களைச் சேர்ந்த 47 பேர் தஞ்சமடைந்துள்ளனர்.

PPS சூராவ் கம்போங் பெர்மாத்தாங் லிமாவில் 8 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 26 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

” மேலும், குபாங் பாசு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இன்னும் 25 குடும்பங்களைச் சேர்ந்த 100 பேராக தொடர்ந்தும் உள்ளது. அவர்கள் அங்குள்ள 2 PPS இல் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

“PPS SK Dewan Kampung Tradisi Lembah Keriang ஆனது 20 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 72 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் முவாஸ் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here