டெலிகோம் மலேசியா (TM ) அதிகாரி போல் வேடமிட்டு மக்காவ் மோசடி; ஓய்வுபெற்ற விரிவுரையாளர் RM1.87 மில்லியனை இழந்தார்

கோலாலம்பூர், நவம்பர் 6 :

ஓய்வுபெற்ற விரிவுரையாளர் ஒருவரிடம், டெலிகோம் மலேசியா (TM ) அதிகாரி போல் வேடமிட்டு, மக்காவ் மோசடியில் ஈடுபட்டதால் RM1.87 மில்லியனை அவர் இழந்துள்ளதாக அறியமுடிகிறது.

கோலாலம்பூர் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் (JSJK) துணைத் தலைவர் (JSJK) கண்காணிப்பாளர் தான் போச் சியோக் இதுபற்றிக் கூறுகையில், கடந்த செவ்வாயன்று பாதிக்கப்பட்ட 80 வயது முதியவரிடமிருந்து அறிக்கையைப் பெற்ற பிறகு, தமது துறை இந்த வழக்கின் விசாரணையை ஆரம்பித்ததாக கூறினார்.

“பாதிக்கப்பட்டவர் RM730,000 தொகையை மாற்றுவதற்காக பல பரிவர்த்தனைகளைச் செய்யுமாறும், தானியங்கி பணம் செலுத்தும் இயந்திர (ATM) அட்டையை ஒப்படைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டார்.

“அதன் பிறகு, விரிவுரையாளரான அந்தப் பெண்மணி தனது கணக்கில் இருந்து RM1.87 மில்லியன் பணப் பரிமாற்றம் நடந்ததைக் கண்டறிந்தார்,” என்று அவர் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மோசடி குற்றத்திற்காக குற்றவியல் சட்டம் பிரிவு 420 இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.

மக்காவ் மோசடிக்கு ஆளாகாமல் இருக்க, அழைப்பவரின் பெயர் மற்றும் பதவி, பணியிடங்கள் போன்றவற்றையும் அதனுடன் தொடர்புடைய அதிகாரிகளின் விவரங்களைப் பெறுமாறும் போச் சியோக் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

“மேலும் இவ்வாறு அநாமதேய அழைப்புகளை பெற்றவர்கள் உடனடியாக, அதிகாரப்பூர்வ லைன் மூலம் குறித்த முகவருக்கோ அல்லது வங்கிக்கோ மீண்டும் அழைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள், மேலும் தொலைபேசி அழைப்புகள் மூலம் கணக்குத் தகவல் மற்றும் OTP மற்றும் TAC (ஒற்றை-பயன்பாட்டு வழி மற்றும் சரிபார்ப்பு குறியீடு) மூன்றாம் தரப்பினருக்கு தெரிவிக்க வேண்டாம்,” என்றும் அவர் கூறினார்.

குற்றச் செயல்கள் குறித்த தகவல் தெரிந்தவர்கள், கோலாலம்பூர் காவல்துறையின் ஹாட்லைன் எண் 03-2146 0584/0585 அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தொடர்புகொள்ளலாம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here