12 வயது மகளின் மானத்திற்கு பங்கம் விளைவித்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு 10 மாத சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம்

புத்ராஜெயா, நவம்பர் 8 :

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தனது மகளின் மானத்திற்கு பங்கம் விளைவித்ததற்காக, இரண்டு முறை பாரிசான் நேஷனல் சட்டமன்ற முன்னாள் உறுப்பினராக இருந்த ஆடவருக்கு இன்று 10 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. குற்றம் நடந்தபோது சிறுமிக்கு 12 வயதுதான் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நீதிபதி ஹனிபா ஃபரிகுல்லா தலைமையிலான மூன்று பேர் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு எதிராக அரசு தரப்பினால் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரணை செய்தது.

நீதிபதி அஹமட் நஸ்ஃபி யாசின் மற்றும் நீதிபதி ஹாஷிம் ஹம்சாவுடன் அமர்ந்திருந்த நீதிபதி ஹனிபா, இந்த வழக்கில் கடந்த ஆண்டு உயர்நீதிமன்றத்தால் 73 வயதான நபருக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த RM5,000 அபராதத்தை ரத்து செய்தார்.

முன்னாள் பேராக் சட்டமன்ற உறுப்பினரான குற்றவாளி, ஏப்ரல் 15, 2015 அன்று மாலை 6 மணியளவில் தைப்பிங் மருத்துவமனையில் சிறுமியின் மீது இந்தக் குற்றத்தைச் செய்தார்.

இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு விசாரணை நீதிமன்றம் 10 மாத சிறைத்தண்டனை மற்றும் RM3,500 அபராதம் விதித்தது. அபராதம் செலுத்த தவறும்பட்ஷத்தில் அவருக்கு கூடுதலாக ஆறு மாத சிறைத்தண்டனையும் விதித்தது.

மேல்முறையீட்டில், உயர் நீதிமன்றம் சிறைத்தண்டனையை ரத்து செய்தது, ஆனால் அபராதத்தை RM5,000 ஆக உயர்த்தியது. மேலும், தற்போது அவரிடமிருந்து விவாகரத்து பெற்றுள்ள அவரது மனைவியிடமும் பாதிக்கப்பட்ட மகளிடமும் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்குமாறும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நீதிமன்ற உத்தரவை குற்றவாளி நிறைவேற்றிஇருந்தார். ஆனால் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அரசு தரப்பு மேல்முறையீடு செய்ததை தொடர்ந்தே, இன்று அவருக்கு 10 மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

இவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 354 கீழ் குற்றஞ்சாட்டப்பட்டது, குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது பிரம்படி அல்லது அத்தகைய இரண்டு தண்டனைகளையும் வழங்க வழிசெய்கிறது.

வழக்கின் உண்மை என்னவென்றால், கடந்த 2015ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட சிறுமி நோய்வாய்ப்பட்டதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவ்வேளை அங்கு சென்ற குற்றவாளி படுக்கையின் ஓரத்தில் அமர்ந்திருந்தபோது பாதிக்கப்பட்ட சிறுமியை மானபங்கம் செய்தார்.

பின்னர் சிறுமி இரவு உணவு அருந்திய பிறகு, சிறுமியின் தாயார் முன்னிலையில் அந்த நபர் அந்த செயலை மீண்டும் செய்துள்ளார், இதைக்கண்ட மனைவி அவரை திட்டினார்.

இருப்பினும், அவர் மூன்றாவது முறையாக அதைச் செய்தார் அதனால் அவரது மனைவியால் மீண்டும் கண்டிக்கப்பட்டார். இதையடுத்து அவர் மருத்துவமனையை விட்டு வெளியேறினார்.

மறுநாள் சிறுமி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு, பாதிக்கப்பட்டவர் தனது குடும்ப உறுப்பினர்களிடம் நடந்ததைக் கூறினார், மேலும் ஏப்ரல் 17, 2015 அன்று குற்றவாளிக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here