இன்று முதல் மீண்டும் முடங்குகிறது நெதர்லாந்து!

நெதர்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்துவரும் நிலையில் சனிக்கிழமை (நவம்பர் 13) முதல் பகுதியளவில் மீண்டும் முடக்கப்படுகிறது.

இன்று அமுலுக்கு வரும் முடக்க நிலை 3 வாரங்களுக்கு அமுலில் இருக்கும் என நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே அறிவித்துள்ளார்.

பல்பொருள் வாணிபங்கள் மற்றும் அத்தியாவசியமற்ற சில்லறை விற்பனை நிலையங்கள் இன்று முதல் முன்கூட்டியே மூடப்படும் என்றும் கபேக்கள் மற்றும் இரவு விடுதிகள் இன்று முதல் இரவு 8 மணிக்கு மூடப்படும் என்றும் சமூக இடைவெளி கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாக்கப்படுவதோடு நான்கு விருந்தினர்களுக்கு மேல் வீடுகளின் தடை விதிக்கப்படுகிறது எனவும் அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

“இது விரும்பத்தகாத செய்திதான். எனினும் தொற்று நோயைக் கட்டுப்படுத்த வேறு வழியில்லை” என நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே நேற்று மாலை நாட்டு மக்களுக்கு ஆற்றிய தொலைக்காட்சி உரையில் கூறினார்.

இதேவேளை, மார்க் ருட்டே தொலைக்காட்சியில் உரையாற்றிக்கொண்டிருந்த நேரத்தில் சமூக முடக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சுமார் 100 எதிர்ப்பு போராட்டக்காரர்கள் ஹேக்கில் உள்ள அரசாங்க கட்டிடத்திற்கு வெளியே கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here