ம.இ.கா. தலைவர் விக்னேஸ்வரன் தெற்காசியாவுக்கான சிறப்புத் தூதராக நியமனம்

கோலாலம்பூர், நவம்பர 14 :

ம.இ.கா. தலைவர் எஸ்.ஏ விக்னேஸ்வரன் தெற்காசியாவுக்கான சிறப்புத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு மலேசிய சுற்றுலா மையத்தில், தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் உரையாற்றிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இதனைத் தெரிவித்தார்.

இதற்கு முன், முன்னாள் ம.இ.கா. தலைவர் எஸ். சாமிவேலு 2011 இல் இந்தியா மற்றும் தெற்காசியாவிற்கான சிறப்புத் தூதராக நியமிக்கப்பட்டார், ஆனால் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் மே 2018 இல் பொறுப்பேற்ற பிறகு அதை நிறுத்தியது.

மேலும் செப்டம்பரில், PAS தலைவர் அப்துல் ஹாடி அவாங் மற்றும் முற்போக்கு ஜனநாயகக் கட்சியின் தலைவர் தியோங் கிங் சிங் ஆகியோர் மத்திய கிழக்கு மற்றும் சீனாவுக்கான சிறப்புத் தூதர்களாகத் தொடர்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

முன்னாள் மனிதவள அமைச்சர் ரிச்சர்ட் ரியோட் ஜெயம் கிழக்கு ஆசியாவிற்கான சிறப்புத் தூதராகவும் நியமிக்கப்பட்டார்.

இந்த சிறப்புத் தூதர் பதவி என்பது அமைச்சருக்கு நிகரான பதவி என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here