மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான ஆரம்ப வாக்குப்பதிவு நாளை தொடங்குகிறது

கோலாலம்பூர், நவம்பர் 15 :

மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான ஆரம்ப வாக்குப்பதிவு நாளை தொடங்குகிறது. 15ஆவது மலாக்கா மாநிலத் தேர்தலில் மொத்தம் 11,557 ஆரம்ப வாக்காளர்கள் நாளை வாக்களிப்பார்கள் என்று தேர்தல் ஆணையத்தின் (EC) செயலாளர் டத்தோ இக்மல்ருடின் இஷாக் தெரிவித்தார்.

அதன்படி, 31 வாக்குப்பதிவு மையங்களும் நாளைக் காலை 8 மணிக்கு திறக்கப்படும்.

“ஆரம்ப வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கையில் 9,217 இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது மனைவிகள் மற்றும் 2,340 போலீசாரும் அடங்குவர்.

“முன்கூட்டியே வாக்களிக்கும் செயல்முறை முழுவதும், தேசிய மீட்புத் திட்டத்தின் கீழ் கோவிட்-19 தடுப்பு வழிகாட்டுதல்களான தனி நபர் இடைவெளி, முகக்கவசம் அணிதல், கை சுத்திகரிப்பான்களைப் பயன்படுத்துதல், உடல் வெப்பநிலை பரிசோதனை மற்றும் வருகைப் பதிவு போன்றவற்றைக் கடைப்பிடிக்கப்படும்.

“தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்கூட்டியே வாக்களிக்கும் செயல்முறையைக் காண முடியும்” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்தல் ஆணையம் தங்களது முகநூல் பக்கத்தில் முன்கூட்டியே வாக்களிக்கும் செயல்முறையை நேரடியாக ஒளிபரப்பும் என்றார்.

முன்கூட்டியே வாக்களிக்கும் அனைத்து வாக்குப்பெட்டிகளும் காவல் நிலைய பூட்டுகளில் வைக்கப்படும் .

“வாக்குச்சீட்டுகள் நவம்பர் 20, 2021 அன்று மாலை 4 மணிக்கு எண்ணப்படும் என்றும் அவர் கூறினார்.

“வாக்குச்சீட்டுகளை எண்ணும் பணி தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட வாக்கு எண்ணும் நிலையங்களில் நடத்தப்படும் மற்றும் அந்தந்த வேட்பாளர்களின் முகவர்கள் அதற்கு சாட்சியாக இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here