குழந்தையை வயிற்றில் மிதித்து கொலை செய்ததாக 31 வயது ஆடவர் மீது குற்றச்சாட்டு

ரோம்பின், நவம்பர் 18 :

கடந்த வாரம் இங்குள்ள கம்போங் ஜங்லாவ்வில் இரண்டு வயது இந்தோனேசிய சிறுவனை கொலை செய்ததாக சூப்பர் மார்க்கெட் தொழிலாளி ஒருவர் மீது, மாவட்ட நீதிமன்றில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.

மாவட்ட நீதிமன்ற நீதிபதி வஹிதா ஜைனல் அபிதின் முன்நிலையில், மலாய் மொழியில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை தான் புரிந்துகொண்டதாக கோலா ரோம்பினில் உள்ள கம்போங் காசிங் இண்டாவைச் சேர்ந்த முஹமட் நூர் அப்துல் மனாப், 31, தலையசைத்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதால் மனு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

நவம்பர் 11 ஆம் தேதி ரோம்பினின் கம்போங் ஜாங்லாவில், அதிகாலை 2 மணியளவில் இரண்டு வயதுக் குழந்தை ஆடாமின் மரணத்தை வேண்டுமென்றே ஏற்படுத்தியதாக, நான்கு பிள்ளைகளின் தந்தையான முஹமட் நூர் குற்றம் சாட்டப்பட்டார்.

ஆரஞ்சு நிற லாக்-அப் சீருடையில் இருந்த குற்றம் சாட்டப்பட்டவர், குற்றவியல் சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டார், இது குற்றம் நிரூபிக்கப்பட்டவுடன் மரண தண்டனையை வழங்குகிறது.

அரசுத் தரப்பில் துணை வழக்கறிஞர் நூர்ஹலிமதுன் சாதியா அப்துல்லாவும், குற்றஞ்சாட்டப்பட்டவர் தரப்பில் வழக்கறிஞர் அஹமடி டேனியல் ரோஸ்லானும் ஆஜராகினர்.

வழக்கு வேதியியலாளர் மற்றும் தடயவியல் அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்குமாக எதிர்வரும் ஜனவரி 20 ஆம் தேதிக்கு நீதிபதி வஹிதா தள்ளிவைத்தார்.

கடந்த வாரம் குற்றஞ்சாட்டப்பட்டவரின் மனைவி நான்காவது குழந்தையைப் பெற்றெடுத்ததார், மேலும் நீதிமன்ற அறைக்கு வெளியே காத்திருந்த அவர், போலீஸ் வாகனத்தை நோக்கி குற்றஞ்சாட்டப்பட்டவரை அழைத்துச் சென்றபோது அமைதியாக இருந்தார்.

நவம்பர் 11 ஆம் தேதி நடந்த சம்பவத்தில், குற்றஞ்சாட்டப்பட்டவர், அடையாள ஆவணங்கள் இல்லாத மயக்கமடைந்த பாதிக்கப்பட்ட குழந்தையை, ரோம்பின் மருத்துவமனைக்கு கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது, அங்கு மருத்துவ அதிகாரி அவரது முதுகு மற்றும் வயிற்றில் காயங்களைக் கண்டார்.

குற்றஞ்சாட்டப்பட்டவரின் பராமரிப்பில் இருந்த குழந்தை, கம்போங் ஜங்லாவில் உள்ள அவரது வாடகை வீட்டில் குறும்பு (gurau kasar)) செய்ததைத் தொடர்ந்து இறந்துவிட்டதாக புகார் அளித்ததையடுத்து, நூரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் குற்றஞ்சாட்டப்பட்டவர் குழந்தை ஆடாமின் வயிற்றில் இரண்டு முறை மிதித்தது அவரது மரணத்திற்கு வழிவகுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here