பாலியல் வன்கொடுமை செய்தால் ஆண்மை நீக்கம் – பாகிஸ்தானில் புதிய சட்டம் அமல்

பாகிஸ்தான் அரசு, பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களின் ஆண்மையை இரசாயனம் மூலமாக நீக்கும் அவசரச் சட்டத்தை உருவாக்கி, அந்த நாட்டின் அதிபரின் ஒப்புதலுக்காகக் கடந்தாண்டு இறுதியில் சமர்ப்பித்திருந்தது. அதற்கு அந்தநாட்டு அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்தநிலையில், தற்போது பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களின் ஆண்மையை இரசாயனம் மூலமாக நீக்கும் சட்டம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே இரசாயனம் மூலமாக ஆண்மை நீக்கும் சட்டம் தென்கொரியா, போலந்து, செக் குடியரசு உள்ளிட்ட நாடுகளிலும், அமெரிக்காவின் சில மாகாணங்களிலும் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here