மஇகா துணைத்தலைவராக எம்.சரவணன் போட்டியின்றி தேர்வு – உதவித்தலைவருக்கு 6 பேர் போட்டி

மஇகாவின் தற்போதைய துணைத் தலைவர் எம்.சரவணன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் 2021-2024 காலத்திற்கான மூன்று உதவித் தலைவர் பதவிகளுக்கு ஆறு வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்.

கட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவடைந்தபோது, 21 மத்திய செயற்குழு (CWC) பதவிகளுக்கு 60 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. அந்தந்த மாநிலங்களில் நவம்பர் 26ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

டி.மோகன், சி.சிவராஜ் மற்றும் டி.முருகையா ஆகியோர் தங்கள் பதவிகளை தற்காத்துக் கொள்ளும் தற்போதைய மூன்று உதவித் த.லைவர்கள் ஆவர் அவர்களுக்கு போட்டியாக தற்போதைய பொதுச்செயலாளர் எம்.அசோஜன், நிர்வாக செயலாளர் ஏ.கே.ராமலிங்கம் மற்றும் தகவல் பிரிவுத் தலைவர் தலைவர் வி.குணாளன் ஆகியோர் போட்டியிடுவார்கள்.

தற்போதைய தலைவர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் செப்டம்பர் மாதம் உயர் பதவிக்கு வேட்புமனுக்கள் கோரப்பட்ட போது போட்டியின்றி  தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here