கோலாக்கிராய்:
30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கம்பங் பெலாங்கா பாலம், கனமழையின் போது அடிக்கடி வெள்ளத்தில் மூழ்குவதால், 10 கிராமங்களில் வசிக்கும் சுமார் 10,000 மக்களின் போக்குவரத்து தடைபடுவதால் அவர்கள் மிக பெரும் கஷ்டத்தை சந்தித்துவருகின்றனர்.
கம்போங் ஜெலுதார், கம்போங் பெலங்கா A , கம்போங் பெலங்கா B , கம்போங் தெமலிர் பாரு, கம்போங் தெமலிர் லாமா, கம்போங் பாரு, கம்போங் மெங்கெபாங், கம்போங் சூச்சோ புத்திரி, கம்போங் கெர்டாக் காங்காங் மற்றும் கம்போங் தெமாங்கன் ஆகியவை சம்பந்தப்பட்ட கிராமங்களாகும்.
கோலாக்கிராய் நகரம் மற்றும் சுல்தான் இஸ்மாயில் பெட்ரா மருத்துவமனைக்கு (HSIP) செல்வதற்கு குடியிருப்பாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய பாதையில் 62,100 மீட்டர் நீளமுள்ள பாலம் அமைந்துள்ளது என்று, கம்போங் பெலாங்கா ருக்குன் தேத்தாங்கா (KRT) தலைவர், முகமட் நோர் அலி கூறினார்.
கடந்த புதன்கிழமை முதல் பெய்த கனமழையால் சுங்கை பாஹியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், அங்குள்ள 2.4மீ உயரமுள்ள பாலமும் மீண்டும் மூழ்கியது என்று அவர் சொன்னார்.





















