பாலஸ்தீனத்தில் சிக்கியுள்ள 5 மலேசியர்களை தாயகம் கொண்டுவர முயற்சி

கோலாலம்பூர் :

­இஸ்ரேலியப் படைகளுக்கும் பாலஸ்தீனக் குழுவான ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் மோதலில் மேற்குக் கரையில் நெருக்கடியான பகுதியில் சிக்கித் தவிக்கும் ஐந்து மலேசியர்களைத் தாயகம் கொண்டு வருவதற்கான முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளது.

இதுவரைப் பாலஸ்தீனத்திலிருக்கும் மலேசிய மருத்துவரை விஸ்மா புத்ரா தொடர்பு கொள்ள முடிந்தது என்று வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ரி அப்துல் காதிர் தெரிவித்துள்ளார்.

மேலும் அங்குள்ள மலேசியர்கள் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர்களுடன் சில வேறு ஆசிய நாட்டினரையும் மீட்பதற்கு தாம் பணியாற்றி வருவதையும் அவர் கூறினார்.

இன்று நடந்த நாடாளுமன்ற அமர்வில் துவான் தான் ஹோங் பின் (PH -பக்ரி) என்பவரின் கேள்விக்குப் பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here