பகாங், சுங்கை ருவான் போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் EMCO அமல் – MKN

கோலாலம்பூர், நவம்பர் 27 :

மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (EMCO) நவம்பர் 28 முதல் டிசம்பர் 11 ஆம் தேதி வரை பகாங்கின் ரவூப்பில் உள்ள சுங்கை ருவான் போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் (Puspen) செயல்படுத்தப்படும் என்று MKN அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் இடர் மதிப்பீடு மற்றும் உள்ளூர் கோவிட்-19 தொற்றுக்களின் போக்கு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் டத்தோ ரோட்ஸி எம்டி சாட் தெரிவித்தார்.

“EMCO க்கான நிலையான செயல்பாட்டு நடைமுறை முன்பு அறிவிக்கப்பட்டதைப் போன்றது” என்று அவர் நேற்று இரவு தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் முகநூல் பக்கத்தில் ஒரு அறிக்கையில் கூறினார்.

 

– பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here