தம்பதியினர் சென்ற காரின் மேல் திடீரென மரம் விழுந்ததில், மனைவி காயமடைந்தார்

பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 28 :

இங்குள்ள செக்‌ஷன் 15 ஜாலான் பென்சாலாவில், இன்று அதிகாலையில் தம்பதியினர் சென்ற கார் மீது, திடீரென சாலையில் இருந்த மரம் விழுந்ததில், மனைவி எம்.நிஷாலினி காயமடைந்தார்.

சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) இயக்குநர் நோரஸாம் காமிஸ் கூறுகையில், நள்ளிரவு 1.09 மணிக்கு சம்பவம் தொடர்பாக தங்களுக்கு அவசர அழைப்பு வந்தது என்றார்.

“பெஞ்சலா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் (BBP) இருந்து ஒரு தீயணைப்பு வாகனத்தில் மொத்தம் ஆறு உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

வந்தவுடன், பிபிபி பென்சாலாவுக்கு அருகில், ஒன்பது மீட்டர் உயரமுள்ள ஒரு மரம் விழுந்து. ஹோண்டா சிட்டி வகை கார் மீது மோதிஇருந்ததைக் கண்டோம்.

“சம்பவத்தின் போது PJ ஓல்ட் டவுனில் இருந்து PJ மாநிலத்திற்குச் சென்று கொண்டிருந்த தனது மனைவி எம்.நிஷாலினி (35) என்பவருடன் பி.ஜெகா (39) என்பவர் காரை ஓட்டிச் சென்றார்.

தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு வருவதற்குள் பாதிக்கப்பட்ட இருவரும் வாகனத்தில் இருந்து இறங்கியதாக நோரஸாம் கூறினார்.

“இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு கண்ணாடித் துண்டுகள் உடைந்ததில் தலையில் சிறு காயம் ஏற்பட்டது. பொதுமக்கள் அவரை சுபாங் ஜெயா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

“பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் காயமின்றி இருப்பதாக கூறப்படுகிறது. பின்னர் தீயணைப்பு படையினர் மரத்தை வெட்டி, சாலையிலிருந்து அகற்றியதுடன் அவற்றை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினர்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here