உலக இறுதி சுற்று பேட்மிண்டன்: பிவி சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்

உலக இறுதி சுற்று பேட்மிண்டன் (World Tour Finals) போட்டித் தொடரில் இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் தென் கொரிய வீராங்கனையான அன் சி -யங் ( An Seyoung)உடன் பிவி சிந்து (PV Sindhu) மோதினார். சிறப்பாக விளையாடிய ஆன் சி யங் தொடர்ந்து மூன்றாவது முறையாக பட்டத்தை பெற்று சாதனை படைத்தார்.

உலக இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து மற்றும் தென்கொரிய வீராங்கனையான அன் சி -யங் ஆகியோர் பலபரிட்சை நடத்தினர். இதில், தோல்வி அடைந்த பிவி சிந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

உலக  பேட்மிண்டன் தரவரிசையில் ‘முதல் -8’ இடத்தில் உள்ள வீரர், வீராங்கனைகள் மட்டுமே களம் காணும் உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டி (World Tour Finals)  இந்தோனேஷியாவின்  பாலி நகரில் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி நடைபெற்றது.  உலக தரவரிசையில் 7ம் இடத்தில் உள்ள இந்தியாவின் பி.வி. சிந்துவும் இத்தொடரில் பங்கேற்று விளையாடினார்.

லீக் தொடரில் பி.வி. சிந்து முதல் இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றார். கடைசி லீக் ஆட்டத்தில்  தாய்லாந்து வீராங்கனை போர்ன்பவீ சோச்சுவாங்கை எதிர்கொண்ட பி.வி.சிந்து  12-21, 21-19, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். எனினும், 2 வெற்றி ஒரு தோல்வியுடன் ஏ பிரிவில் இரண்டாம் இடம் பிடித்த பி.வி.சிந்து அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

அரையிறுதியில் ஜப்பான் வாராங்கனை அகானே யமாகுச்சியுடன் சிந்து பலபரிட்சை நடத்தினார். விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியில்   21-15 15-21 21-19 என்ற செட் கணக்கில் பி.வி. சிந்து வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் தென் கொரிய வீராங்கனையான அன் சி -யங் உடன் பிவி சிந்து மோதினார்.

இதில்,  21-16, 21-12 என்ற செட் கணக்கில் அன் சி யங் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் பாலியில் தொடர்ந்து மூன்று முறை பட்டத்தை வென்று அவர் சாதனை படைத்தார். இறுதிச் சுற்றியில் வெற்றியை தவறவிட்ட பிவி சிந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here