மலேசியக் குடும்பம் 100 நாள் அபிலாஷைகள் தினம்; பரிசுத் தொகை மொத்தம் 10,000 ரிங்கிட்

கோலாலம்பூர், டிச.6-

ஒரே கூரையின் கீழ் மத்திய அரசாங்கத்தின் அனைத்து அமைச்சு களும் அவற்றின் ஏஜென்சிகளும் அவற்றின் மலேசியக் குடும்பம் 100 நாள் அபிலாஷைகள் அடைவுநிலையை மக்களுக்குச் சமர்ப்பிக்க இருக்கின்றன. நாட்டின் வரலாற்றில் இப்படியொரு திட்டம் நிறைவேற்றப்பட இருப்பது இதுதான் முதல் முறை. நாட்டின் 9ஆவது பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் சிந்தனையில் உதித்த ஓர் உன்னதமான கொள்கை, மக்களின் நல்வாழ்வை முன்னிறுத்தி அவர் இந்தக் கோட்பாட்டை வகுத்து அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

இந்தப் பிரமாண்ட நிகழ்ச்சி வரும் 2021 டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கி 2021, டிசம்பர் 12ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு நடைபெறுகிறது.

பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் டிசம்பர் 9ஆம் தேதி பிற்பகல் 2.00 மணிக்கு அதிகாரப்பூர்வமாகத் தொடக்கிவைக்கிறார்.

கோலாலம்பூர் கொன்வென்ஷன் செண்டரில் (கேஎல்சிசி) இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மிக நேர்த்தியான முறையில் செய்யப்பட்டு வருகின்றன.
மலேசிய இளைஞர்களுக்குப் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அவர்களின் வருகையை ஈர்ப்பதற்குப் பல்வேறு வகையான போட்டி நிகழ்ச்சிகள் அட்டவணையில் இடம்பெற்றுள்ளன.

வேலை வாய்ப்புக்கான நேர்காணல் உட்பட இ-எப்போர்ட்ஸ், FIFA, Mobile Legend Bang Bang போன்றவை நடத்தப்படுகின்றன. மொத்தப் பரிசுத் தொகை 10,000 ரிங்கிட்.

மலேசியக் குடும்பத்தின் அபிலாஷைகளின் வெற்றியை உறுதிசெய்திடுவதில் இளைஞர்களின் பங்கு அளப்பரியது, குறிப்பிடத்தக்கது. நாட்டின் எதிர்காலத்தை ஆரோக்கியமாக முன்னெடுக்கும் ஆளுமையை நிலைநிறுத்தி முன்னெடுக்கும் ஆற்றல் இளைஞர்களிடமே உள்ளது.

இந்நிலையில் இளைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் நேரடியாகப் பங்கேற்பது நாட்டின் உறுதியான, வளமான எதிர்காலத்தை உறுதிசெய்யும் என்பது பிரதமரின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.மலேசிய இந்திய சமுதாய இளைஞர்கள், இளம் பட்டதாரிகள், மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் எதிர்பார்க்கிறார்.

களம் இறங்குவோம் – பிரதமரின் மலேசியக் குடும்ப கோட்பாட்டை உயர்த்திப் பிடிப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here